விஜய் தாயுடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா!! வெளியான தகவல்..
KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் இன்று டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடக்கவுள்ளது.

தற்போது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் இசை நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், விஜய் ஸ்டேடியத்திற்கு கிளம்பு வந்து கொண்டிருக்கிறார்.
இந்த பெண் யார் தெரியுமா
இந்நிலையில் நேற்று ஆடியோ லான்சிற்காக விஜய்யின் தாயார் சென்றுள்ளார். அப்போது விஜய் மற்றும் ஷோபாவுடன் ஒரு இளம்பெண் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. யார் அந்த பெண் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் தாய் மாமாவின் மகள் தானாம்.

விஜய்யின் தாய்வழி தாத்தா நீலகண்டன், விஜயவாஹினி ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தியதோடு, லைட் மியூசிக் மற்றும் நாடக கம்பெனி நடத்தி வந்தவர்.
விஜய்யின் பாட்டி, அதாவது நீலகண்டனின் மனைவி ஒரு இசைக்கலைஞர், இவர்களுக்கு மொத்தம் 4 பிள்ளைகள்.
இதில் மூத்தவர் விஜய்யின் தாய் ஷோபா. அதற்கடுத்து ஷீலா, அவரும் ஒரு பாடகிதான். அதோடு நடிகையும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் நடித்தவர் ஷீலா. ஷோபா, ஷீலா தவிர நீலகண்டன் மற்றும் லலிதா தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள்.

எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர் தான் விஜய்யின் தாய் மாமாக்கள். இருவரும் பாடகர்கள் தான். இதில் எஸ் என் சுரேந்தரின் மகள் பல்லவி தான் விஜய்யுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டவர். பல்லவியின் சகோதரர் தான் அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்த விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.