அரசியல் வந்தா ஜால்டா போடணும்..என்கிட்ட காசு இல்ல!! அதிரடி பதிலை கொடுத்த நடிகர் அர்ஜுன்..
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் அர்ஜுன் சார்ஜா. தற்போது வில்லன் ரோல்களிலும், முக்கிய ரோல்களிலும் நடித்து வரும் அர்ஜுன் நடிப்பில் நவம்பர் 21 ஆம்தேதி ரிலீஸான படம்தான் தீயவர்கள் குலை நடுங்க.

படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நடிகர் அர்ஜுன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அரசியல் வந்தா
அதில், நிறைய பேர் என்னை அரசியலுக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால், நான் போகவில்லை. அரசியலுக்கு ஒரு வேறுவிதமான மனநிலை வேண்டும். இப்போது இருக்கிற அரசியலுக்கு எல்லாம் பணம்தான்.

நான் ஏதாவது பிரச்சனைனா தட்டி கேட்கணும்னு அரசியலுக்கு வந்தா அது நடக்காது. சில விஷயங்கள் பேசக்கூடாதுன்னு சொல்லுவாங்க. மேலிடம் சொல்லுவதற்கு எல்லாம் ஜால்ரா போடணும், அது நம்மால் முடியாது.
அதேபோல் பணம் இருந்தால் தான் இங்கே ஜெயிக்க முடியும், அந்தளவிற்கு என்னிடம் பணம் இல்லை, இதனால்தான் அரசியலுக்கு வரவில்லை என்று அர்ஜுன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.