50 வயசுல இரண்டாம் கல்யாணம்!! 58 வயதில் 2வது குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர்..
அர்பாஸ் கான்
பாலிவுட் நடிகரான சல்மான் கானின் சகோதரரான அர்பாஸ் கான், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். தன்னுடைய சகோதரர் சல்மான் கான் அளவிற்கு நட்சத்திர அந்தஸ்த்தை பெறமுடியாவிட்டாலும் தனக்கான இரு இடத்தினை அமைத்துக்கொண்டார் அர்பாஸ் கான்.
இயக்குநராகவும் நடிகராகவும் நடித்து வந்த அர்பாஸ் கான், 1998ல் பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொண்டார். சுமூகமான திருமண வாழ்க்கை செல்ல ஒரு மகன் பிறந்து வாழ்ந்து வந்தனர்.
19 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் அர்பாஸ் கான் 50 வயதான போது 2023ல் ஷுரா கானை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அப்பாவான நடிகர்
தற்போது 58 வயதாகும் அர்பாஸ் கானுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே முதல் மனைவி மலைக்கா அரோராவுக்கும் இவருக்கு மகன் பிற்ந்த நிலையில் தற்போது இரண்டாம் மனைவி ஷூரா கானுடன் குழந்தை பிறந்து மீண்டும் தந்தையாகியுள்ளார் அர்பாஸ் கான்.