லவ் பண்ணேன்..அவன் லோன் முடிஞ்சிடுச்சு, லவ்வும் முடிஞ்சிச்சு!! கெமி எமோஷனல் டாக்..

Viral Video Bigg Boss Bigg boss 9 tamil Vyishali Kemkar
By Edward Oct 08, 2025 11:30 AM GMT
Report

பிக்பாஸ் 9 கெமி

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் பிக்பாஸ் சீசன் 9 விஜய் சேதுபதி தலைமையில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ள நிலையில், சென்ற முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கிடையே சண்டை நிலவி வருகிறது. 2வது நாளான இன்று போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

லவ் பண்ணேன்..அவன் லோன் முடிஞ்சிடுச்சு, லவ்வும் முடிஞ்சிச்சு!! கெமி எமோஷனல் டாக்.. | Biggbosstamil9 Kemy Love Story Video Viral

அதில் பேசிய கெமி, என்னை பார்க்கும் கண்கள் எல்லாம் ஆபாசமா பார்த்திருக்கு. நிறைய பார்ட் டைம் மாடலிங் பண்னேன், ஆங்கர், ஆக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.

நீ ஒரு ஆம்பள மூஞ்சி, நீ அம்பளயா? பொம்பளயான்னு தெரியல, அப்படி சொன்னவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன், தன்னையும் தன் குடும்பத்தையும் மொத்தமா பார்த்திகிட்டது ஆம்பளத்தனம்னா, ஆமா நான் அம்பளதான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் கெமி.

லவ் பண்ணேன்..அவன் லோன் முடிஞ்சிடுச்சு, லவ்வும் முடிஞ்சிச்சு!! கெமி எமோஷனல் டாக்.. | Biggbosstamil9 Kemy Love Story Video Viral

லவ் பண்ணேன்

மேலும் பேசிய கெமி, நாம தான் வாழ்க்கையில் தோத்துட்டே இருப்போமே, காதலாவது கைத்தரும்னு நம்பி, ரொம்ப லவ் பண்ணேன், நிறைய காதல், அன்பெல்லாம் கொடுத்தேன்.

ஒன்னா ஜெயிக்கணும், வாழணும்னு இருந்தேன்னு அவன் லோனுக்கு மாச மாசம்0 EMI-லாம் கட்டுன, அவன் லோன் முடிஞ்சிடுச்சு, லவ்வும் முடிஞ்சிச்சு என்று சிரித்தபடி தன் சோகத்தை மறைத்து பேசியிருக்கிறார் கெமி.

இதற்கு பலரும் இப்படியான பொண்ண ஏமாத்த எப்படி மனசு வருதுன்னு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.