சென்னையில் தொடையழகி நடிகை வீட்டு பக்கத்தில் பண்ணைவீடு!! நடிகரின் ஓய்வுகால ஆசை..
இந்திய சினிமாவில் இருகாலக்கட்டத்தில் தீயாக நடித்து மிகப்பெரிய அந்தஸ்த்தை தென்னிந்திய சினிமாவில் காட்டியவர் தான் அந்த நடிகர். தற்போதும் விடாமல் நடித்து வரும் அந்த மூத்த நடிகர் சென்னை, கானாத்தூரில் ரூ. 300 கோடியில் பண்ணை வீடு கட்டுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன்
அவர் வேறுயாருமில்லை நம்ம கமல் ஹாசன் தானாம். இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், தன் ஓய்வு காலத்தில் பண்ணை வீட்டில் வாழவேண்டும் என்று கமல் ஹாசன் ஆசை. ரஜினிக்கு பண்ணை வீடுகள் உண்டு, சிவாஜிக்கு உண்டு, அர்ஜுனுக்கும் உண்டு, ஆனால் கமலுக்கு இல்லை.
பண்ணைவீடு
ஆழவேர்பேட்டை வீட்டில் வளர்ந்த கமல், 5 லட்சத்துக்கு போட் கிளப்பில் வாடகை வீட்டுக்கு குடியேறினார். தற்போது ஓய்வு காலத்தை செலவிட பண்ணை வீடு கட்ட விரும்புகிறார். ஆனால் சென்னை கானாத்தூரில் ரூ.300 கோடியில் வீட்டு கட்டவில்லை, மாறாக 100 கோடி ரூபாய்க்கு வீடு கட்டலாம்.
அதில் அவர் மட்டும் தான் வாழப்போகிறார், திமுக சார்பில் விரைவில் ராஜயசபா எம்பி பதவி கொடுக்கவும் வாய்ப்புண்டு என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை ரம்பா கூட பேட்டியொன்றில் கமல் ஹாசன் சார், என் வீட்டுப் பக்கத்தில் வீடு கட்டி வருகிறார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.