அப்பட்டமாக பொய் சொல்லும் தனுஷ்! அப்போ அப்படி பேசிய அவரா இது?
தனுஷ் இப்போது இந்தியா முழுவதும் தெரிந்த ஸ்டார். ஏன் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இன்னும் சில காலத்தில் அவர் உலக அளவில் பேசப்படும் நடிகர் ஆனாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு பாலிவுட், ஹாலிவுட் என படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த ஹிந்தி படமான அத்ராங்கி ரே வெளியாகி இருந்தது. அந்த படத்தின் விளம்பரத்திற்காக அவர் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் தான் ஒரு introvert என்றும், அதிகம் பேசமாட்டேன் என்றும் கூறி இருந்தார்.
ஆனால் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தனுஷ் பேட்டி ஒன்றில் பேசும்போது மிக சகஜமாக பேசும் தனுஷ் தனது வெற்றி தனது சொந்த உழைப்பு தான் என்றும் அதற்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என எப்படி பேசலாம் என அவர் தொகுப்பாளரிடம் கூறி இருக்கிறார்.
அப்போது அப்படி பேசிய தனுஷா இப்போது இப்படி மாறிட்டாரு? அப்பட்டமாக பொய் சொல்கிறாரே என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Introvert Dhanush Anna? pic.twitter.com/k0HiHKAgZS
— சமர் (@Drunks_monkey) January 1, 2022