17 வயது பெண்ணுடன் நிச்சயம்!! ரூ. 100 கோடி பட்ஜெட்டில் திருமணத்தை முடித்த டாப் ஸ்டார்...
இந்திய ஆடம்பர திருமணம்
பெரும்பாலும் இந்தியர்கள் திருமணத்திற்கான ஆடம்பர செலவை பிரமாண்டமாக செய்வது வழக்கம். அதுவே சினிமா பிரபலங்கள் அரசியல்வதிகள், கோடீஸ்வரர்கள் என்றால் திருமணத்திற்கான செலவு பல ஆயிரம் கோடிகளிலேயே இருக்கும்.

அந்தவகையில், அனுஷ்கா சர்மா - விராட் கோலி, ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ், கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல், சமீபத்தில் கல்யாணம் செய்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா உள்ளிட்ட பல திருமணங்கள் இந்தியர்கள் கண்ட ஆடம்பர திருமணங்களாக இருக்கிறது.
இந்த திருமணங்களையே மிஞ்சும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் திருமணம் நடந்துள்ளது. அவர் தான் ஜூனியர் என்.டிஆர்.

ஜூனியர் என்.டி.ஆர் - லட்சுமி பிரணதி
ஆந்திராவின் பிரபல தொழிலதிபரான நார்னே ஸ்ரீனிவாச ராவின் மகள் லட்சுமி பிரணதியை தான் ஜூனியர் என்.டி.ஆர் 15 ஆண்டுகளுக்கு முன் 2011ல் திருமணம் செய்தார். அவர்களின் திருமணத்திற்கான பட்ஜெட் ரூ. 100 கோடி. அப்போதைய காலக்கட்டத்தின் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கவே யோசித்தவர்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எந்திரன் படம் ரூ. 130 கோடியும் ஷாருக்கானின் ரா ஒன் ரூ.150 கோடி பட்ஜெட்டிலும் எடுக்கப்பட்டது. இப்படங்கள் ரிலீஸாவதற்கு முன்பே, அந்த பட்ஜெட்டையை மிஞ்சும் அளவிற்கு ஜூனியர் என்.டி.ஆரின் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தில் 3 ஆயிரம் பிரபலங்கள், 1200 ரசிகர்கள் என பெரிய தொகை செலவிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கான மண்டபத்தை அலங்கரிக்க மட்டுமே ரூ. 18 கோடி செலவிடப்பட்டதாம். மணமகள் லட்சுமி பிரணதியின் தங்கத்தால் ஆன காஞ்சிபுர பட்டுப்புடவை, ரூ. 1 கோடிக்கு செலவாகியுள்ளது.

அப்போது லட்சுமி பிரணதிக்கு வயது வெறும் 17 தானாம். இது சர்ச்சையாக 18 வயதாகும் வரை காத்திருந்து லட்சுமி பிரணதியை ஜூனியர் என்.டிஆர் திருமணம் செய்திருக்கிறார்.