34 வயது சீரியல் நடிகையின் காதல் வலையில் சிக்கிய பசங்க பட நடிகர் - அந்த நடிகை யார் தெரியுமா?
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2009 -ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடித்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.
இதைதொடரந்து துரோகி, கோலி சோடா, போன்ற படங்களில் நடித்த இவர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

இந்த நடிகையா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ப்ரீத்தி. இவர் நடிகை மட்டுமின்றி தொகுப்பாளர், மாடல் பன்முகம் கொண்டவர்.
லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் நடித்த ப்ரீத்திக்கு தற்போது வயசு 34 ஆகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிஷோர் தற்போது தன்னை விட நான்கு வயது மூத்தவரான ப்ரீத்தியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர், " உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்து வருடம் நமது பிறந்தநாட்கள கணவன் மனைவியாக கொண்டாடுவோம்" என பதிவிட்டுள்ளார்.