சிரஞ்சீவின் மகன், முன்னணி நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவின் மகனும் பிரபல நடிகருமானாவர் ராம் சரண். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் படுதோல்வியடைந்தது.
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. இப்படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் peddi.
இன்று ராம் சரணின் பிறந்தநாள் என்பதால், peddi படத்தின் First லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டனர். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1380 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 90 கோடி முதல் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.