திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகர்!! உண்மையை உடைத்த இயக்குனர்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளில் சிக்கி தன் மார்க்கெட்டை இழந்து தற்போது தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ ஆரம்பித்திருக்கிறார். 96 படம் மிகப்பெரிய வர்வேற்பை கொடுத்ததை அடுத்து, பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை கதாபாத்திரம் திரிஷாவை மிகப்பெரிய இடத்தினையும் மார்க்கெட்டையும் கொடுத்தது.
அதன்பின் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்தப்பின், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வரம்பரா, கமலின் தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சையான சம்பவங்களை சந்தித்த திரிஷா அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
திரிஷாவுக்கு முத்தம் கொடுக்கவே பிரபல நடிகர் மறுத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவை விட்டு பிரியும் நிலையில் இயக்குனர் பிரேம் குமார் முத்தம் கொடுக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு விஜய் சேதுபதி நோ என்றால் நோ தான் என்று உறுதியாக கூறியிருந்ததாக இயக்குனர் பிரேம் குமார் கூறியிருக்கிறார்.. அதேபோல் விஜய் சேதுபதி சக நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடிப்பதை தவிர்த்தும் வருகிறார்.
You May Like This Video