நாகரிகம் வேண்டும்.. அறிவு இருக்கா? மிஸ்கினை எச்சரித்த பிரபல நடிகர்

Tamil Cinema Tamil Actors Tamil Directors
By Bhavya Jan 24, 2025 08:30 AM GMT
Report

இயக்குனர் மிஸ்கின்

சில நாட்களுக்கு முன் இயக்குனர் மிஸ்கின், பாட்டில் ராதா படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்றார். இதில் அவர் எல்லைமீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.

நாகரிகம் வேண்டும்.. அறிவு இருக்கா? மிஸ்கினை எச்சரித்த பிரபல நடிகர் | Actor Reply For Director Bad Words

இதற்கு மேடையில் இருந்தவர்களும், எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக சிரித்திக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், 2k லவ் ஸ்டோரி படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ், மிஸ்கின் அநாகரிகமான பேச்சை கண்டித்துள்ளார்.

எச்சரித்த பிரபல நடிகர் 

அதில், "சமீபத்தில் படத்தின் விழா மேடையில் மிஸ்கின் பேசியது மிகவும் வல்கரா இருந்தது. இயக்குனராக இருப்பதால் எது வேண்டுமானலும் பேசலாம் என்பது இல்லை.

அந்த வீடியோவை பார்த்தேன், அவர் பேசியது அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. பிரசாத் லேப் மேடை பல ஜாம்பவான்களை பார்த்த மேடை. இந்திய முழுவதும் உள்ள பலரும் இந்த மேடையில் அமர்ந்து பேசிவிட்டு சென்றுள்ளனர்.

நம் பத்திரிகையாளர்கள் நண்பர்கள் எவ்வளவு பேர் இங்கு இருக்குறீர்கள், அந்த இடத்தில் வந்து கெட்ட வார்த்தை பேசுவது என்பது தவறான ஒன்று.

நாகரிகம் வேண்டும்.. அறிவு இருக்கா? மிஸ்கினை எச்சரித்த பிரபல நடிகர் | Actor Reply For Director Bad Words

மேடை நாகரிகம் என்று இல்லையா? என்ன வேணும்னாலும் பேசுறதா? நிறைய புத்தகங்களை படித்து இருக்கேன் என சொல்றீங்க, உலக படங்களை பார்த்து இருக்கேன் என சொல்றீங்க, அப்பறோம் என்ன அறிவு இருக்கு உங்களுக்கு.

குறைந்தபட்ச நாகரிகம் வேண்டாமா, ஒரு மேடையில் பேசும் பேச்சா இது" என்று அவரது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.