மகன் தவெக VS மகள் திமுக!! சத்யராஜ் வீட்டில் சூடுபிடித்த அரசியல் களம்..
சத்யராஜ்
முன்னனி நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து பிஸியாக இருந்து வருபவர் நடிகர் சத்யராஜ். மேடைகளில் பெரியார் பற்றி பேசியும் வருகிறார். அவர் ஒரு பக்கம் இருக்க அவரது மகன் சிபி ராஜ் ஒருசில படங்களில் நடித்தும் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சத்யராஜின் மகள் திமுக கட்சியில் இணைந்து நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர், நான் எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி, அதற்கு உதாரணமாக காலை உணவுத்திட்டம்.
மகன் தவெக VS மகள் திமுக
அதேபோல் பெண்களுக்கு திமுக மரியாதை அளிக்கும் கட்சி, அதற்கு புதுமைப்பெண் திட்டம். மகள் திமுக கட்சியில் இணைந்துள்ள நிலையில் சத்யராஜ் அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அதேபோல் சத்யராஜின் மகன் சிபிராஜ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
அவர் தவெக கட்சியில் இணையவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஒரே வீட்டில் மகள் திமுகவிலும், மகன் தவெகவிலும் இணையப்போவதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுமோ என்றும் கருத்துக்கள் எழுந்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தேர்தல் இன்னும் 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சத்யராஜ் வீட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.