கோவிலுக்குள் செல்ல பிரபல நடிகைக்கு தடை..இந்த காலகட்டத்திலும் இப்படி ஒரு நிலமையா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையில் ஒருவர் அமலா பால். சமீபத்தில் இவர் கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் என்ற கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஆனால் கேரளாவில் உள்ள குருவாயூர், திருவைராணிக்குளம் மகாதேவர் போன்ற கோவில்களில் மற்ற மதத்தினர் செல்ல அனுமதியில்லை. இந்நிலையில் அமலா பால் மற்ற மதத்தினர் என்பதால் அவரை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கு மனம் வருந்திய அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்துள்ளார்.
இப்படி ஒரு நிலைமையா
பின்னர் அவர் கோவில் வருகை பதிவிட்டில், "நான் திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் உள்ளை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த காலகட்டத்திலும் இப்படி ஒரு நிலைமையா. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மனிதனை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களை மனிதர் மதிக்கும் காலம் வரும்" என்று கூறியிருந்தார்.
நடிகை அமலா பால் ஒரு கிறிஸ்தவர் என்பதால் தான் கோவில் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் ரோட்டில் நின்றவாறு தரிசனம் செய்ய வறுபுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.