என்னை மிக மோசமாக பேசிவிட்டனர், எரும சாணி விஜய் மற்றும் அவர் மனைவி மீது புகார்
Tamil Web Series
Web series
By Tony
எரும சாணி புகழ் விஜய்யை எல்லோருக்கும் தெரியும். ஹாய் ஆண்டி என்ற ஒற்றை வார்த்தையில் இணைய உலகிலேயே செம பேமஸ் ஆனவர்.
இதை தொடர்ந்து தன்னுடன் நடித்து நக்ஷத்ரா என்பவரையே திருமணம் செய்துகொண்டது, அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் ரிசார்ட் என்ற வெப் சீரிஸில், மலையாள நடிகை அனுராகா நடித்து வருகிறார்.

ஆனால், இவரை கமிட் செய்துவிட்டு, நடித்தத்திற்கும் பணம் தரவில்லை, 4 மாதங்களாக வேலையும் கொடுக்கவில்லை, கேட்டால், நிறுவனத்தை கேளுங்கள் என்கின்றனர்.
அங்கு கேட்டால் விஜய்யை கேளுங்கள் என்கின்றனர், விஜய் மனைவி நக்ஷதராவோ, கல்யாணம் கட்டிகிட்டு வீட்டில் உட்காரு என்பது போல் ரெக்கார்ட் அனுப்பியுள்ளார், இதை மீடியாவில் சொன்னபிறகு மிரட்டுகிறார்கள் என அனுராகா பேசியது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.