பிரபல இயக்குனருடன் ரகசிய திருமணம்.. நடிகை அனுஷ்கா அவரே கூறிய தகவல்
அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
பின் இவர் தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் அனுஷ்கா நடித்த படங்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
அனுஷ்கா ஷெட்டி திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வருவதை நம்மால் காண முடிகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் வயது தான் 43 வயதை எட்டிய நிலையிலும் இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் உலா வருகிறார்.
தற்போது, மீண்டும் அவரை பற்றி ஒரு வதந்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சைஸ் ஜீரோ இயக்குனர் பிரகாஷ் கோவெலமுடியுடன் 2020 - ம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவி வருகிறது.
அனுஷ்கா பதில்
இந்நிலையில், அனுஷ்கா தனியார் பத்திரிக்கை நிறுவனத்துடன் நடந்த நேர்காணல் ஒன்றில் திருமணம் குறித்து எழுந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
அதில், "எனக்கும் பிரகாஷ் கோவெலமுடிக்கும் திருமணம் நடந்து விட்டது என்று பரவும் தகவல் அனைத்தும் பொய்யானது. இதுபோன்ற வதந்திகள் எதுவும் என்னை பாதிக்கவில்லை.
ஆனால், ஏன் என் திருமணம் குறித்து அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. திருமணம் என்பது புனிதமான ஒன்று அதை யாரும் மறைக்க நினைக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.