தன்னுடைய உடை பற்றி வந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த நடிகை நிதி அகர்வால்

Nidhhi Agerwal
By Kathick Dec 25, 2025 02:30 PM GMT
Report

ஹைதராபாத்தில் நடைபெற்ற ராஜா சாப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கிளம்பும்போது கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார் நடிகை நிதி அகர்வால்.

அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை நடிகைக்கு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நடிகைகள் வெளியில் வரும்போது கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என சிவாஜி என்கிற தெலுங்கு நடிகர் கருத்து தெரிவித்தது சர்ச்சையானது.

தன்னுடைய உடை பற்றி வந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த நடிகை நிதி அகர்வால் | Nidhhi Agerwal Reply To Who Criticized Her Dress

சர்ச்சைக்கு பின் அவர் மன்னிப்பு கேட்டாலும் தான் சொன்ன கருத்தில் இருந்து மாறப்போவதில்லை என கூறினார். இந்நிலையில், சம்பவத்திற்கு பின் அமைதியாக இருந்து வந்த நிதி அகர்வால், மௌனம் களைத்து பேசியுள்ளார்.

"Blaming a Victim is called Manipulation" என அவர் கோபமாக பதிவிட்டு இருக்கிறார். இதன்மூலம் தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நிதி அகர்வால் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.