இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்
Tamil Cinema
By Yathrika
நடிகை பாவனா
கன்னட நடிகை பாவனா ரமண்ணா சந்திரமுகி பிரனாஷி என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமானார். பின் பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஒரு சோகமான விஷயம் குறித்த தகவல் வந்துள்ளது. திருமணம் செய்ய விரும்பாத இவர் குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் விரும்பியுள்ளார்.
எனவே ஐபிஎஃப் சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளுக்கு தயாராகியுள்ளார். குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்குள் ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. இதில் என்ன சோகம் என்றால் 2 குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது.