அக்கா-ன்னு கூப்பிட்டு 50 ஆயிரத்திற்கு பேரம் பேசினான்? உண்மையை உடைத்த 48 வயது நடிகை சர்மிளா
சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் கூட சில காரணங்களால் தூக்கி எறிந்து ஆளா காணாமல் போகும் நிலை உண்டாகும். அப்படி 80களில் நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா, மனசே மெளனமா போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சர்மிளா. தமிழ், மலையாளம் கன்னடம் படங்களில் நடித்துள்ள சர்மிளா பல கஷ்டங்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
திருமண வாழ்க்கை
1995ல் கிஷோர் சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு கிஷோருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சர்மிளா. இதன்பின் 2006ல் ராஜேஷ் என்ற இன் ஜினியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் திருமண வாழ்க்கை சரிபட்டு வரவில்லை என்று 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சர்மிளா.

அட்ஜெஸ்ட்மெண்ட்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனக்கு வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், தனக்கு நடந்த அட்ஜெஸ்மெண்ட் விசயங்களை பற்றி ஓப்பனாக கூறியுள்ளார். எல்லாத்துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது.
மலையாள சினிமாவில் ஒரு படத்தில் நடித்திருந்த போது ஷூட்டிங் சமயத்தில் அப்படத்தின் குட்டத்தட்ட 24 வயதுள்ள இளம் உதவி தயாரிப்பாளர்கள் என்னை சேச்சி (அக்கா) என்று ஆரம்பத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
சின்ன பசங்க பேரம் பேசியது
ஷூட் துவங்கி 3 நாட்களில் அவர்களின் உதவியாளர்களை அனுப்பி அட்ஜெஸ்மெண்ட்டுக்கு ரெடியா என்று கேட்டனர். இதற்காக என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பேரமாக பேசினார்கள். அதுமட்டுமில்லாமல் 3 பேரில் பிடித்தவர்களை யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து படுக்கையை பகிர வேண்டும் என்று கூறினார்கள்.
என்னுடைய மகனைவிட கொஞ்ச வயது தான் அதிகமாக இருக்கும் அவர்கள் என்னை அம்மா ஸ்தானத்தி பாருங்கள் என்று நான் கூறினேன். பின் அதைமீறியும் என்னிடம் அப்படி நடந்து கொண்டதால் படத்தில் இருந்து விலகி அங்கிருந்து கிளம்பி விட்டேன் என்று சர்மிளா கூறியுள்ளார்.