என்ன ஆட்டம்.. நடிகை முமைத் கான் குத்தாட்ட வீடியோ, ஹைலைட்டே டாட்டூ தான்!
முமைத் கான்
கடந்த 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஐட்டம் டான்சராக அறிமுகமானவர் நடிகை முமைத் கான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
நடிகர் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் டான்சராக தமிழில் அறிமுகமானார். அதன்பின், கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு படு மாஸ் நடனம் ஆட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.
டோலிவுட்டில் வெளியான போக்கிரி படத்தில் மகேஷ் பாபுவுடன் ஆட்டம் போட்ட முமைத் கான் தமிழில் தளபதி விஜய்யுடன் "என் செல்லப் பேரு ஆப்பிள்" பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார்.
அதுமட்டுமின்றி, சியான் விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தில் இடம்பெற்ற "என் பேரு மீனாகுமாரி" ஐட்டம் பாடலும் இவருக்கு ஏகப்பட்ட ஹைப்பை உருவாக்கியது.

குத்தாட்ட வீடியோ!
இந்நிலையில், தனது ரசிகர்களை குஷிப்படுத்த இன்ஸ்டாகிராமில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டுள்ளார். இவர் இடுப்பில் இருக்கும் டாட்டூவை பார்த்துவிட்டு, ஹைலைட்டே டாட்டூ தான் என கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.