வடிவேலு மீது பஞ்சாயத்து!! துணை நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் நடிகர் காதல் சுகுமார்..
காதல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் காதல் சுகுமார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார்.
வடிவேலு - காதல் சுகுமார்
அவர் கூறுகையில், வடிவேலுவை சந்திக்க சென்ற போது போண்டாமணி, முத்துக்காளை வெளியில் சென்றதும், என்னை மட்டும் இருக்க சொல்லி பேசினார் வடிவேலு. ஒவ்வொரு கம்பனிக்கு சென்று, என்னை மாதிரி நடிப்பேன் என்று கூறி வருகிறாயா, வாய்ப்பு வந்தது, வேறுவழி இல்லாமல் பண்ணிட்டேன் என்று சொன்னதாகவும், உடனே எதிர்த்து எதிர்த்து பேசிறியா என்று கூறி பின்னாடி இருந்த ஒருவர் என்னை அடித்தார்.
ஏதோ பண்ண பார்க்கிறார்கள் என்று நினைத்து, இனிமே எதுவும் பண்ணமாட்டேன், ஊரைவிட்டே ஓடுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினேன். இப்படி நடிகர் வடிவேலு தன்னிடம் நடந்து கொண்ட விசயத்தை கூறிய காதல் சுகுமார் கூறியிருந்தார்.
துணை நடிகை
தற்போது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடந்திவிட்டு, நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து காதல் சுகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் போலிசார்.