நான் உயிருடன் இருக்கிறேன்...கார் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய பாகுபலி பட நடிகை..
நோரா ஃபதேஹி
நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தின் மனோஹரி பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு பிரபலமானவ தான் நடிகை நோரா ஃபதேஹி. கனேடிய நடனக்கலைஞரும் நடிகையுமான நோரா, 1992ல் கனடாவின் மாண்ட்ரீலில் பிறந்தவர்.

இந்தியாவை பூர்வமாக கொண்ட நோரா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தியா வந்துள்ளார். நட்ன கலைஞராக அறியப்பட்டப்பின் ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானர்.
பாகுபலி படத்தில் மனோஹரி, டெம்பர் படத்தில் இட்டகே ரெச்சிபோடம், கிக் 2வில் இல் கிருகு கிக், ஷேர் படத்தில் நாபேரே பிங்கி, லோஃபர் படத்தில் நேப்பே தோச்சே போன்ற பாடல்களில் ஆட்டம் போட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
பின்னணி பாடகியாகவும் திகழும் நோரா, பல கான்சர்ட் நிகழ்ச்சிகளில் லைவாக பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

கார் விபத்தில் சிக்கி
இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கிறார் நோரா ஃபதேஹி. மும்பையில் நேற்று மதியம் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் பயணித்தபோது மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கி வந்த கார் டிரைவரால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நோரா, கடுமையான பாதிப்புகளை சந்திக்க அவரும் காயமடைந்தார். பின் சிறிய காயங்கள் என்பதால் சில மணிநேரங்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நோரா. அன்றிரவே இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டும் இருக்கிறார். எனினும் விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நான் உயிருடன் இருக்கிறேன்
அதில், நண்பர்களே, நான் நலமாக இருக்கிறேன், நான் பெரிய கார் விபத்தில் சிக்கியிருந்தேன். குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்ற ஒருவர் என் கார் மீது மோதினார். நான் உயிருடன் இருக்கிறேன், சில சிறிய காயங்கள் தான். தயவு செய்து குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள், மதியம் 3 மணிக்கு ஒருவர் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குகிறார் என்பதை நம்ப முடியவில்லை என்று அந்த வீடியோவில் நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.