3 வருஷம் 3000 கோடி பாக்ஸ் ஆபிஸ்!! கொடிக்கட்டி பறக்கும் நேஷ்னல் கிரஷ்..
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது கலக்கி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அனிமல், வாரிசு, புஷ்பா 2, Chhaava உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் சாதனையும் படைத்தது.
3000 கோடி பாக்ஸ் ஆபிஸ்
சமீபத்தில் புஷ்பா 2 படம் 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தனர். சமீபத்தில் அவர் நடிப்பில் பாலிவுட்டில் ரிலீஸ் ஆன Chhaava படம் இதுவரை 116.5 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம்.
அப்படி கடந்த 3 படங்களில் நடித்த ராஷ்மிகா 3000 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபிஸ் குயினாக திகழ்ந்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் குபேரா, சிக்கந்தர் உள்ளிட்ட பல படங்கள் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.