அந்த படத்துல என்ன அப்படி யூஸ் பண்ணாங்க.... புலம்பும் கிளாமர் புகழ் நடிகை
Kiran Rathod
By Yathrika
கிரண் ரதோட்
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து இப்போதும் மக்களின் நியாபகத்தில் இருப்பவர் நடிகை கிரண் ரதோட்.
ஜெமினி, வில்லன், வின்னர் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே வரவில்லை.
அதன்பிறகு நடிக்க வந்தவர் துணை கதாபாத்திரங்களில் நடித்தார், இப்போது அது கூட இல்லை.
ஆனால் தினமும் சமூக வலைதளங்களில் மிகவும் கிளாமர் உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அண்மையில் இவர் ஒரு பேட்டியில், ஆம்பள படத்தில் சுந்தர்சிக்காக நடித்தேன். என்னை அந்த படத்தில் செட் பிராப்பர்டி போல பயன்படுத்தினார்கள், ஏன் அதில் நடித்தோம் என புலம்பிய நாட்கள் உள்ளது என வேதனையடைந்துள்ளார்.