கையில் தாலியுடன் வந்த கூமாபட்டி தங்கபாண்டி.. பதறிய நடிகை மமிதா பைஜூ!

Pradeep Ranganathan Actress Mamitha Baiju
By Bhavya Oct 14, 2025 10:30 AM GMT
Report

Dude

பிரதீப் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் படம் Dude. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுதா கொங்கராவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

இப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

கையில் தாலியுடன் வந்த கூமாபட்டி தங்கபாண்டி.. பதறிய நடிகை மமிதா பைஜூ! | Actress Mamitha Dance Video Goes Viral

பதறிய மமிதா பைஜூ!

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோஷியல் மீடியா மூலம் பிரபலமடைந்த கூமாபட்டி தங்கபாண்டியும் வந்திருந்தார்.

கேரளா ஸ்டைலில் உடை அணிந்து கையில் தாலியுடன் வந்த அவர், 'எனது அம்மா உங்களுக்கு இந்த கிஃப்ட்டை கொடுக்க சொன்னார்' என கூற மமிதா பதறிவிட்டார்.

பின் அவர் தங்கபாண்டியை பார்த்து 'நான் உங்களை அண்ணன் என்றுவேறு சொல்லிவிட்டேன். ரசிகர்கள் ஒத்துக்கொண்டால் இந்த கிஃப்ட்டை நான் வாங்கிக்கொள்கிறேன்.

ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை' என்று பணிவுடன் தெரிவித்து, அவருடன் Dude படத்தின் பாடலுக்கு நடனமாடினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.    

கையில் தாலியுடன் வந்த கூமாபட்டி தங்கபாண்டி.. பதறிய நடிகை மமிதா பைஜூ! | Actress Mamitha Dance Video Goes Viral