54 வயதில் 17 வயதான இளைய மனைவி!! விஜய் தேவரகொண்டா பட நடிகரின் காதல் கதை..
மனிஷ் சவுத்ரி
தெலுங்கில் கடந்த ஜூலை மாதம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் தான் கிங்டம். இப்படத்தில் 2003ல் இருந்து நடித்து வரும் நடிகர் மனிஷ் சவுத்ரியும் நடித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வரும் மனிஷ், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நடிப்பில் ஓடிடியில் வெளியான Ba***ds of Bollywood என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். 2016ல் ஒரு பெண்ணுடன் நிச்சயத்தை முடித்தப்பின் அது திருமணம் வரை கைக்கூடவில்லை.
இதனையடுத்டு 2023ல் தன்னுடைய 54வது வயதில் 37 வயதான ஸ்ருதி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 17 வயது வித்தியாசம். தங்களின் திருமண வயது வித்தியாசம் குறித்து மனிஷ் சவுத்ரி ஒரு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
17 வயது வித்தியாசம்
எங்களுக்கு இந்த வயது வித்தியாசம் பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை, ஆனால் ஸ்ருதிக்கு அவரது வீட்டில் உள்ளவர்களை சமாதானப்படுத்த 2 ஆண்டுகள் தேவைப்பட்டது என்று மனிஷ் கூறியிருக்கிறார்.
மேலும் மனைவி ஸ்ருதி, நான் மும்பையில் உள்ள திரையரங்கில் தான் அவரை முதன்முதலாக பார்த்தேன். எங்கள் இருவருக்கும் 17 ஆண்டுகள் வயது வித்தியாசம், நான் அவரிடம் உங்கள் வயது என்னவென்று கேட்டேன். அவர் சொன்னதும் ஆச்சரியப்பட்டேன். வயது எங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை, எங்களுடைய முதல் உரையாடலில், எனக்கு வயது வித்தியாசம் குறித்தெல்லாம் கவலையில்லை.
நீ என்னைவிட நீண்ட நாட்கள் வாழ வேண்டும், காரணம் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது, நான் செனாறுவிடுகிறேன் என்று மனிஷ் கூறியதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். பின் என் வீட்டில் இருப்பவர்களை சம்மதிக்க 2 ஆண்டுகள் தேவைப்பட்டது. இவரைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று சொன்னேன், அப்படி இல்லாவிட்டால் திருமணமே வேண்டாம் என்ற உறுதியில் இருந்து, எல்லாம் முடிந்து அவர்கள் ஒப்புக்கொள்ள 2 ஆண்டுகளானது என்று ஸ்ருதி கூறியிருக்கிறார்.