இளம் நடிகை எச்சரித்தும் அவசரப்பட்டு கல்யாணத்தை முடித்த சீரியல் நடிகை! இதுதான் காரணம்?
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் யாரடி நீ மோகினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை நட்சத்திரா. இந்த சீரியல் முடிந்த பின் மற்றொரு பிரபலமான டிவியில் வள்ளி திருமணம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீநிதி - நட்சத்திரா
சமீபகாலமான தான் சிம்புவை காதலிப்பதாகவும் எங்களை சேர்த்து வையுங்கள் என்று கூறி அழுது ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீநிதி. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீநிதி இப்படி பேசி வருவது அவரது அம்மாவிற்கே சங்கடத்தை ஏற்படுத்தியது.
மேலும் நடிகை நட்சத்திரா காதலிக்கும் நபர் எனக்கு நன்றாக தெரியும் அவர சரியானவர் கிடையாது. அது மீறி நட்சத்திரா அந்த நபரை கல்யாணம் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கையாக வீடியோவையும் வெளியிட்டார்.
இதுகுறித்து நட்சத்திரா பதிலுக்கு ஒரு வீடியோவையும் வெளியிட்டது வைரலானது. தற்போது மன உளைச்சலால் ஸ்ரீநிதி மனநல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

திடீர் கல்யாணம்
இந்நிலையில் நடிகை நட்சத்திரா பல நாட்களாக பிரபல தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வரும் ஷில்வா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி பலரின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்கள்.
ஆனால் நட்சத்திரா காதலித்து வந்த ஷில்வாவின் தாத்தா உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளாராம். அதன் காரணமாகவே இருவரும் அவசர அவசரமாக கல்யாணத்தை முடித்துள்ளதாக கூறபடுகிறது.