நயன்தாரா இப்படி பட்டவரா? அதுக்கு அடிமையாகிட்டார் .. பிரபலம் உடைத்த ரகசியம்
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா. சமீப நாட்களாக பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவர்களது நிறுவனமான ஃபெமி 9 கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் 6 மணி நேரம் தாமதமாக சென்றதாக பேச்சு எழுந்தது.
அதுமட்டுமின்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அங்கு வந்திருந்த மக்களிடம் பேசுகையில், 'மேடம் கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது' என்று கூறிய விஷயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
ரகசியம்
இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இந்த விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நயன்தாராவுக்கு தன்னை எப்போதும் லைம் லைட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, அதன் காரணமாக தான் இது போன்று செய்து வருகிறார்.
அவருக்கு ரிட்டையர்டு ஆகும் காலம் வந்துவிட்டது. ஆனால், புகழிலேயே இருக்க வேண்டும் என்ற நோய் அவர்களுக்கு இருப்பதால் இரண்டு பேரும் புகழ் போதைக்கு அடிமையாகிவிட்டார்கள். இது நீண்ட நாட்கள் நீடிக்காது" என்று கூறியுள்ளார்.