விக்னேஷ் சிவன் முன்பு அந்த நடிகருடன் லிவ்விங்கில் இருந்த நயன்தாரா - யார் தெரியுமா?
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நயன்தாரா. சில தினங்களுக்கு முன்பு அவரின் கனெக்ட் திரைப்படம் வெளியானது. இதில் வினய், சத்திய ராஜ், ரோஹித் சுர்ஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.
காதல் கடந்து போகும்
நயன்தாரா திரைத்துறையில் வந்த புதிதில் நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்தனர். பல சர்ச்சைகளை கடந்து வந்த நயன்தாரா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இவர் நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியானது நானும் ரவுடி தான் . இப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் 2022 ல் திருமணம் செய்தார்.
லிவிங் டுகெதர்
சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை குறித்து பல தகவல் பகிர்ந்துள்ளார். அதில் அவர் " நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு நடிகர் ஆர்யாவுடன் லிவிங் டுகெதரில் இருந்தார். அவர்கள் இருவரும் மலையாள மொழியை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகினார்கள். அப்போது நயன்தாரா ஆர்யாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார்" என்று கூறினார்.