என்னையும் என் மகளையும் ஆபாசமாக சித்தரிக்கிறார்கள் -புகார் அளித்த பிரபல நடிகை
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரவீனா. ராஜா ராணி, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் இவர் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கோமாளி படங்களில் நடித்துள்ளார்.

தவறான வீடியோ
சமீபத்தில் பிரவீனா, தனது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைதொடரந்து விசாரித்த காவல் துறையினர், பாக்யராஜ் (23 வயது) என்ற மாணவரை கைது செய்தனர். பின் அவர் சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.
இந்நிலையில் பிரவீனா கூறியது, " நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் மூலம் சிலர் என்னுடைய மகள் மற்றும் நண்பர்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதை பழிவாங்கும் நோக்கத்தில் செய்கிறார்கள். இது குறித்து என் மகளும் தற்போது சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளார்" என கூறினார்.
