திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்தா!! முற்றுப்புள்ளி வைத்த சீரியல் நடிகை பிரியங்கா..
சின்னத்திரை நட்சத்திரங்கள் சக நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி பின் காதலித்து திருமணம் செய்து வருவது அதிகரித்துள்ளது. ஆனால் ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இதற்கு தான் ரோஜா சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்று பலர் ஷாக்கானார்கள். குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரிவை விமர்சித்தும் வந்தனர். என் குடும்பத்தினர் சம்பதம் இருந்ததாகவும் ராகுல் வீட்டில் திருமணத்தில் மகிழ்ச்சியில்லை என்றும் பிரியங்கா தெரிவித்திருந்தார்.
அதன்பின் மீண்டும் சீரியலில் நடித்து வரும் பிரியங்கா, திருமணமாகி ஒரு வருடமாகிய நிலையில் கணவரை பிரிந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா. தன்னுடைய கணவருடன் தன்னுடைய பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் பிரியங்கா நல்காரி.