பொண்ணு திருமணத்துக்கு கூட.. பேச முடியாமல் கதறி அழுத நடிகை ராதா..
தமிழ் சினிமாவில், 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து டாப் இடத்தில் இருந்தார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். நேற்று நடிகை ராதா கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மரணமடைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அப்போது அவர் கூறுகையில், சினிமாவில் நடித்த அந்த காலக்கட்டத்திற்கு பின் கடைசியாக அவரை ஊட்டியில் ஒரு ஷூட்டிங்கில் பார்த்ததாகவும் அதன்பின் பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் என் மகள் கார்த்திகா திருமணத்திற்கு அவர் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் தர சென்றிருந்தேன். ஆனால் விஜயகாந்தை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் அவர் மனைவி பிரேமலதாவிடம் அழைப்பிதழை கொடுத்தேன்.
திருமணத்திற்கு ஒரு நாள் முன்பே வந்து வாழ்த்திவிட்டு சென்றார் அக்கா பிரேமலதா என்று கூறியிருக்கிறார். ஆனால், இப்படியொரு சூழலில் இங்கு இவரை பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நடிகை ராதா.