என்ன சொன்னீங்க.. அம்மா ரோல் பண்ணுனா!! பயில்வானை வாயடைக்க வைத்த இளம் நடிகை..
மருதம்
இயக்குநர் வி கஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் வித்தார்த் நடிப்பில் உருவாகி இன்று அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ள படம் தான் மருதம். இப்படம் இளம் நடிகை ரக்ஷனா, அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ளது.
இப்படத்தினை பத்திரிக்கையாளர்களுக்கு திரைப்பட்டு படத்தினை பற்றிய கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை ரக்ஷனாவிடம் கேள்விகளை கேட்டு மொக்கை வாங்கிய சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நடிகை ரக்ஷனா
அதில், படத்தின் நாயகியான ரக்ஷனாவிடம் முதல் படத்திலேயே தாயாக நடித்துவிட்டால், அடுத்த படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று பயில்வான் கேட்டுள்ளார். அதற்கு ரக்ஷனா, நான் இரண்டாவது படத்தில் நடித்துவிட்டேன், அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை, அந்த படத்தின் இயக்குநர் என்னை இப்படி கேட்கவில்லையே என்று பதிலடி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய பயில்வான், நான் உன் நன்மைக்கு தான் சொல்கிறேன், ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி நடித்ததால் தான் அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்று கூற அதற்கு ரக்ஷனா, ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார்.
அம்மா ரோல்
அந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சினிமாவில் தனிப்பெயர் இருக்கு. அதேபோல் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்துவிட்டால், அதன்பின் தொடர்ந்து அம்மா ரோலில் தான் நடிப்பார்கள் என்கிற ரூல் இங்கே இருக்கிறது.
அப்படி ஒரு ரூலை இங்கே இருப்பவர்கள் வகுத்து இருக்கிறார்கள். அந்த ரூலை யாராவது பிரேக் செய்ய வேண்டும், இதை உடைக்க சினிமாவிற்கு யாராவது வரவேண்டும், அது நானாகவே இருக்கிறேன் என்று தக்க பதிலடி கொடுத்து பயில்வான் ரங்கநாதனை வாயடைக்க வைத்திருக்கிறார் நடிகை ரக்ஷனா.