மேடையில் ஐஸ்வர்யா ராயின் எடையை கேட்ட வைரமுத்து!! இதுதான் காரணமாம்..
ஜீன்ஸ்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1998ல் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், ராதிகா, லட்சுமி, செந்தில், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் ஜீன்ஸ்.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிகப்பெரிய வெற்றி கண்ட இப்படம், வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் கடந்துள்ளது. இப்படத்தின் பாடல் ரஹ்மானின் இசை இன்று வரை ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற பாடலை ஏழு அதிசயங்களையும் காண்பித்து அசத்தி இருப்பார் இயக்குநர் ஷங்கர். வைரமுத்துவின் வரிகளில் ஒவ்வொரு பாடல்களும் புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், மேடையில் வைத்து நடிகை ஐஸ்வர்யா ராயின் உடல் எடையை பற்றி கேட்டு குறைக்க சொன்னார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

என்ன வெயிட்
அதில் வைரமுத்து ஒரு தடவை மேடையில் ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் என்ன வெயிட் என்று கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா ராய் 52 கிலோ என்றார். அதற்கு வைரமுத்து நீங்கள் 2 கிலோ குறைத்துவிடுங்கள், ஏனென்றால் கவிஞன் வாக்கு பொய்க்கக்கூடாது.
ஜீன்ஸ் படத்தில் 50 கே ஜி தாஜ்மஹால் என்று நான் பாடல் எழுதிவிட்டேன். அதனால் நீங்கள் 2 கிலோ குறைத்துவிடுங்கள் என்று வைரமுத்து ஐஸ்வர்யா ராயிடம் கூறியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.