இப்படி செய்து தான் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றேன்.. தயக்கமின்றி பகிர்ந்த நடிகை க்ரித்தி!

Tamil Cinema Krithi Shetty Actress
By Bhavya Nov 26, 2025 07:30 AM GMT
Report

க்ரித்தி ஷெட்டி

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படம் இன்றி க்ரித்தி தற்போது 2 தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவை அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இப்படி செய்து தான் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றேன்.. தயக்கமின்றி பகிர்ந்த நடிகை க்ரித்தி! | Krithi Shetty Openly About Her First Movie

இப்படி தான் பெற்றேன்! 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தனது முதல் படம் கிடைத்தது எப்படி என்பது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், " நான் ஒரு விளம்பர ஆடிஷனுக்கு சென்றிருந்தேன், முடிந்ததும் என்னை அழைத்து செல்ல என் அப்பா வர கொஞ்சம் தாமதமானது. அப்போது அருகில் ஒரு ஸ்டுடியோ இருப்பதை பார்த்து உள்ளே நுழைந்தேன்.

அப்போதுதான் அங்கே ஒரு படத்திற்கான ஆடிஷன் நடப்பதை அறிந்தேன். அவர்கள் என்னைப் பார்த்ததும், ‘உங்களுக்கு நடிக்க ஆர்வம் உள்ளதா?’ என்று கேட்டார்கள்.

நான் என் அம்மாவின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் இயக்குநர் புச்சி பாபு சார் கால் செய்தார். இப்படித்தான் ‘உப்பெனா’பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.    

இப்படி செய்து தான் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றேன்.. தயக்கமின்றி பகிர்ந்த நடிகை க்ரித்தி! | Krithi Shetty Openly About Her First Movie