விலகிய சுந்தர் சி, ரஜினி - கமல் படத்தை இயக்கப்போகும் இளம் இயக்குநர்.. சம்பளம் 10 கோடி ரூபாய்
கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் தலைவர் 173. இப்படத்தை சுந்தர் சி இயக்கப்போகிறார் என அறிவிப்பை வெளியிட்டனர்.

ஆனால், அந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே இப்படத்திலிருந்து தான் விலகுவதாக சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. சரி, அடுத்ததாக யார் இந்த படத்தை இயக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், பல இயக்குநர்களிடம் ரஜினி, கமல் கதை கேட்டு வருவதாக விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ரஜினி - கமல் இணையும் படத்தை இளம் இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப்போகிறாம்.

இவர் ஹரிஷ் கல்யானை வைத்து பார்க்கிங் என்கிற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தற்போது சிம்புவை வைத்து STR 49 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.