எல்லா ஆண்களையும் ஜெயில்ல போடலாமா? நாயுடன் ஆண்களை ஒப்பிட்ட நடிகை ரம்யா..
தெருநாய்கள்
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்களை அகற்றி, உரிய நடைமுறைகளை பின்பற்றி, கருத்தடை மற்றும் தடுப்பூசிக்குபின் நியமிக்கபட்ட தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதகுறித்து பல நகரங்களில் எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணையில் தெருநாய்கள் பாதுகாவலர்கள் தரப்பில் ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில்.
விலங்குகள் அச்சுறுத்தப்படுவதாக உணரும்போது, அவற்றின் வசிப்பிடம் ஆக்கிரமிக்கப்படும்போது நாய்த் தாக்குதல்கள் பெரும்பாலும் நடக்கிறது என்றும் விலங்குகளிடம் இரக்கம் காட்டுவது போன்ற சம்பவங்களை குறைக்க உதவும் என்று வாதிட்டார்.
அதன்பின் நீதிபதிகள் சார்பில் பதிலளித்த விக்ரம் நாத், இந்த அக்கறை, கடிப்பதையும் தாண்டி பொதுவான அச்சுறுத்தல் குறித்த உணர்வு வரை நீடிப்பதாக கூறினார். காலையில் எந்த நாய் எந்த மனநிலையில் இருக்கிறது என்று உங்களால் எப்படி அடையாளம் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என் வி அஞ்சாரியா போன்றவர்கள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை ரம்யா, ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது, அவன் எப்போது பாலியல் பலாத்காரம் செய்வான், கொலை செய்வான் என்று தெரியாது. அதனால் எல்லா ஆண்களையும் சிறையில் அடைத்துவிடலாமா என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கருத்து பகீரங்கமாக கூறியிருக்கிறார்.