வேண்டாணு சொல்லியும் எடுக்க சொன்னாங்க, இண்டர்நெட்ல போட்டோ இருக்கு!! நடிகை ரெஜினா..
ரெஜினா கேசன்ட்ரா
தமிழில் 2005ல் வெளியான கண்டநாள் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்து கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரெஜினா கேசன்ட்ரா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ரெஜினா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் தீபிகா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, ஆரம்பத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். ஒரு படத்தின் பிரமோஷனுக்காக ரேடியோ சேனல் பேட்டிக்கு கூப்பிட்டார்கள். பெரிய ரேடியோ சேனல் என்பதால் ஒரு குர்தா, ஜீன்ஸ், சாதாரண செருப்பு போட்டு, ஒரு காலேஜ் பொண்ணு மாதிரியே நோ மேக்கப்ல போனேன். எனக்கு மேக்கப் போட பிடிக்காது.
பேட்டி முடிந்த பின், சரி மேம் இப்போ பிக்சர்ஸ் எடுக்கலாம்னு சொன்னதும் என்னது பிக்சர்ஸ்-ஆ என்று கேட்டேன். வெப் சைட்டுக்கு மேம் என்று சொல்லி வற்புறுத்தினார்கள். நான் வேண்டாம் என்று சொல்லியும் என்னை சம்பதிக்க வைத்து பிக்சர்ஸ் எடுத்தார்கள்.
அந்த போட்டோ இன்னும் இண்டர்நெட்டில் தான் இருக்கு, அந்த போட்டோவை பார்த்தால், ஒரு நடிகையிடம் நடிப்பை தாண்டி, அவர் யார்? என்பதை தான் புரிந்து கொண்டதாக ரெஜினா தெரிவித்துள்ளார்.