நடிகை ரேகாவை கட்டாயப்படுத்தி 5 நிமிஷம் முத்தமிட்ட நடிகர்!! அக்காட்சியால் தலையில் துண்டைப்போட்ட தயாரிப்பாளர்..
நடிகை ரேகா
ஜெமினி கணேசஷின் மகளாக இந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேகா. 4 வயதில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரேகா, சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.
15 வயதில் 'தோ ஷிகாரி' படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்த ரேகா, வங்காள மொழி சூப்பர் ஸ்டார் பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு ஜோடியாக 32 வயதில் நடித்திருந்தார்.
இப்படத்தின் போது நடிகை ரேகாவை நடுங்கவைத்த சம்பவம் பற்றி அவரின் சுயசரிதையான ரெகா தி அண்டோல்ட் ஸ்டோரி’யில் பகிர்ந்துள்ளார். அப்படத்தின் போது ரேகா பிஸ்வஜித்துடன் ஒரு காதல் காட்சியில் நடிக்கவிருந்தது.
ஆனால் பிஸ்வஜித்தும் படத்தின் இயக்குநர் குல்ஜித் பாலும் அவரது சம்மதம் இல்லாமல் முத்தக்காட்சியை எடுத்தார்களாம். கேமரா ரோல் என சொன்னவுடன் இருவரும் காதல் காட்சியில் நடித்திருக்கிறார்கள்.
கட்டாயப்படுத்தி முத்தம்
காட்சி முடிந்ததும் இயக்குநர் கட் சொல்லவில்லையாம். இதனால் பிஸ்வஜித் ரேகாவை கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். சுமார் 5 நிமிடங்கள் விடாது முத்தமிட்டப்பின் அங்கு இருந்தவர்கள் கைத்தட்டி விசில் அடுத்தனர். இதனால் ரேகா அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னிடம் இதுபற்றி எதுவும் கூறாததால் ஷாட் முடிந்ததும் ரேகா கண்ணீர்விட்டு அழத்துவங்கியிருக்கிறார்.
பிஸ்வஜித்தின் இந்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்போது இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். இருப்பினும் இந்த நேரத்தில் ரேகா எதுவும் சொல்லவில்லை, ஏனென்றால் ஏதாவது சொன்னால் தன்னை இந்த படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று நினைத்தாராம்.
அதேநேரத்தில் இந்த முத்தம் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக் அமைந்தது. ஏனென்றால் அந்த முத்தக்காட்சி காரணமாக சென்சார்ஷிப்பில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டதாம். 10 ஆண்டுகளுக்கு பின் அப்படம் வெளியானபோதும் அதற்கு சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படத்தயாரிப்பாளர் கடும் நஷ்டத்தை அடித்ததாக கூறப்படுகிறது.