தனுஷ் பட நடிகை சம்யுக்தாவுக்கு திருமணமா!! மாப்பிள்ளை இவர்தான்..
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சம்யுக்தா. களரி, ஜூலை காற்றில் போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்த சம்யுக்தா அடுத்தடுத்த மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா, நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி படத்தில் மீனாட்சி ஆசிரியையாக நடித்து அனைத்து இளசுகளையும் கவர்ந்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சம்யுக்தாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாள் நண்பரை சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வருடம் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதால் சம்யுக்தா புதிய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. சம்யுக்தா தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.