முன்னாள் கிரிக்கெட் வீரரை 2வது திருமணம் செய்த பிக் பாஸ் நடிகை சம்யுக்தா..புகைப்படம் வைரல்..
சம்யுக்தா ஷான்
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா ஷான். திருமணமாகி விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் இருக்கும் சம்யுக்தா, தொகுப்பாளினி பாவனாவுடன் தற்போது வசித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த மதராஸ் மாஃபியா கம்பெனி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சம்யுக்தா. அப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு தனிப்பட்ட மற்றும் வாய்ப்புகள் சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து வந்தார்.
2வது திருமணம்
இதையடுத்து சம்யுக்தா பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். விரைவில் இருவருக்கும் திருமணம் என்ற பேச்சுக்கள் எழுந்து வந்தது. இதுகுறித்து சம்யுக்தாவும் அனிருதாவும் எதுவும் கூறாமல் இருந்தனர்.

இந்நிலையில், நடிகை சம்யுக்தா ஷான், அனிருதா ஸ்ரீகாந்தை 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும் அனிருதா ஸ்ரீகாந்தும் ஏற்கனவே விவாகரத்து செய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

