58 வயது நடிகை சீதாவா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்களே...
நடிகை சீதா
பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை சீதா. ஆண் பாவம் படத்தில் அறிமுகமானவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து பார்த்திபனுடன் புதிய பாதை உட்பட பல வெற்றிப் படங்களில் நடிக்க மிகவும் பிரபலமானார்.

அந்த படத்தில் நடிக்கும் சீதா-பார்த்திபன் இடையே காதல் மலர இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் களமிறங்கியவர் சின்னத்திரையில் அதிகம் பயணம் செய்கிறார். தற்போது சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து சமையல், மாடித் தோட்டம் போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

ஸ்டன்னிங் லுக்
நீளமான சுருள் முடியை கொண்ட நடிகை சீதா திடீரென மொட்டை அடித்து ஷாக் கொடுத்தார். தற்போது ஸ்டன்னிங் லுக்கில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் போட்டோஷூட்டில் கலக்கியுள்ளார். சீதாவின் புது லுக்கை பார்த்டு நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.