ஜோதிகாவால் பயந்து ஓடிய நடிகைகள்! சூர்யா படத்தில் கஷ்டப்பட்ட இயக்குனர்
தமிழ் சினிமாவில் சூப்பர் ரியல் ஜோடி என்று கூறப்படும் தம்பதிகளாக இருப்பவர்கள் ஜோதிகா - சூர்யா. வாளி படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா சூர்யாவுடன் பல படங்களில் ஜோடிப்போட்டு நடித்து வந்தனர்.
4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா அதன்பின் குழந்தை குடும்பம் என்று சினிமாவை விட்டு அதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
ஜோதிகா - சூர்யா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இருந்த படங்களில் ஒன்று சில்லுன்னு ஒரு காதல். 2006ல் வெளியான இப்படத்தில் ஐஸுவாக பூமிகாவும், குந்தவையாக ஜோதிகாவும் நடித்திருப்பார். ஆனால் முதலில் பூமிகாவிற்கு பதில் வேறொரு நடிகையை தான் இயக்குனர் கிருஷ்ணா தேர்வு செய்து வைத்திருந்தாராம்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஜோதிகா சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிப்பதாக இருந்தால் ஐஸு கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகையும் ஏற்றுக்கொள்ளாமல் ஓடிவிட்டார். மிகப்பெரிய ஹீரோயின் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டபோது ஜோதிகா நடிச்சா நம்ம காலின்னு தெரிந்து தான் அவர் நடிக்க மறுத்தனர்.
ஒரு கட்டத்தில் படத்தையே நிறுத்தும் அளவிற்கு இம்சை கொடுத்தது. அதன்பின் நடிகை பூமிகா பற்றி சூர்யாவிடம் பேசினேன். அப்படி நடிக்க ஆரம்பித்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் பூமிகா.
என்னுடைய நெருக்கமான நண்பராக பூமிகா திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியது இப்படம் ஆரம்பித்து முடிக்க என்றும் கூறியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. தற்போது நடிகர் சிம்புவை வைத்து பத்து தல படத்தினை இயக்கியிருப்பது கூடுதல் தகவல்.
Its Actually Actress #Asin pic.twitter.com/JCKqUlhLAR
— chettyrajubhai (@chettyrajubhai) July 11, 2022