சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஐஸு-ஆ இது.. இப்படி ஆளே மாறிட்டாங்களே..

Shriya Sharma
By Edward Nov 11, 2024 09:30 AM GMT
Report

சில்லுனு ஒரு காதல் 

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஐஸு-ஆ இது.. இப்படி ஆளே மாறிட்டாங்களே.. | Actress Shriya Sharma Latest Saree Photos

ஸ்ரேயா சர்மா

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.

சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஐஸு-ஆ இது.. இப்படி ஆளே மாறிட்டாங்களே.. | Actress Shriya Sharma Latest Saree Photos

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஸ்ரேயா சர்மா, சமீபத்தில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம குட்டி ஐஸுவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனோடு ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.