பூனை கண்ணழகியுடன் சந்தோஷமாக வாழும் வாரிசு பட நடிகர்.. ஆளே மாறிப்போன நடிகை
சிவரஞ்சனி
90-களில் இளைஞர்களுக்கு கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவர் மிஸ்டர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தலைவாசல். பொன் விலங்கு, அரண்மனை காவலன் என அடுத்தடுத்து வெற்றி படங்களை தமிழ் மக்களை கவர்ந்தார்.
20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த சிவரஞ்சனி பிரபல நடிகையாக ஜொலித்து வந்தார். அவரது கண்கள், பூனை கண்கள் போல் வசீகரமாக இருப்பதால் இவருக்கு பூனை கண் நாயகி என்று இவரின் ரசிகர்கள் பட்டப் பெயர் வைத்து அழைத்தனர்.
திருமண வாழ்கை
இவர் தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
பல திரைபடங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் தனது குடும்பம் தான் முக்கியம் என்று அனைத்து நிராகரித்துவிட்டார் என ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார் சிவரஞ்சனி.
இவரின் கணவர் ஸ்ரீகாந்த் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.