சினிமாவில் படுத்து கூட சம்பாரிக்கலாம் .. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி
நடிகை சோனா
திரைத்துறையில் கிளாமர் நடனம் மற்றும் நடிப்பின் மூலம் இளைஞர்களை கட்டி போட்டவர் நடிகை சோனா. இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான 'மிருகம்' படத்தில் சிறு ரோலில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த சோனா, சமீபகாலமாக சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மோசமான விஷயம்
இந்நிலையில் பேட்டி அளித்த நடிகை சோனா தனது சினிமா வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், " சினிமா துறையில் நான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன்.
ஒரு பெரிய மேகசினில் இருந்து வந்து என்னை போட்டோஷூட் செய்தார்கள். மக்கள் மத்தியில் பிரபலமான மேகசினில் வரப் போகிறோம் என்று நானும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
சில நாட்களுக்கு பிறகு வெளிவந்த அந்த மேகசினில் என் புகைப்படத்திற்கு கீழ் 'சினிமாவில் படுத்து கூட சம்பாரிக்கலாம்' என்று எழுதியிருந்தது. இதை பார்த்தவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன்" என கூறினார்.
