பிச்சை எடுத்துக்கூட சாப்பிடுவேன்.. வடிவேலு கூட நடிக்க மாட்டேன்!! நடிகை சோனா
நடிகை சோனா
90ஸ் கிட்ஸ்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சோனா. பல படங்களில் சிறு ரோல்களில் நடித்தாலும் கிளாமரில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் வாழ்க்கையில் நடந்த பல மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில், சோனா கவலைப்படாதே நான் இருக்கேன் என்று கூறுபவர்களை கூட நான் நம்பமாட்டேன், ஏனென்றால் நான் ஏமாந்தது ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல, பல பேர் என்று தெரிவித்துள்ளார்.
வடிவேலு
மேலும், வடிவேலுவுடன் குசேலன் படத்தில் நடித்தேன், அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை. அவரைப்பற்றி பலர் பல விஷயத்தை பேசிவிட்டார்கள், நிறைய பேர் அவரை கழிவி ஊற்றிவிட்டார்கள். நான் புதுசாக சொல்வதற்கு எதுவும் இல்லை.
அப்படத்திற்கு பின் 16 படங்கள் அவருடன் நடிக்க வந்தது. கோடி ரூபாய் கொடுத்தா கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். பிச்சை எடுத்து சாப்பிடுவேனே தவிர, அவர் கூட நடிக்கமாட்டேன் என்று சோனா தெரிவித்துள்ளார்.