மேடையில் சிவகார்த்திகேயனை அசிங்கப்படுத்திய ஸ்ரீதிவ்யா.. வைரலாகும் வீடியோ...
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கர் படத்தில் தமிழில் அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதற்கு காரணம் சிவகார்த்திகேயனுடன் நடித்த அந்த கெமிஸ்ட்ரி தான். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. மது பார்ட்டியில் எல்லைமீறிய போதையில் தள்ளி சென்ற தகவல் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. இதனால் அவரது மார்க்கெட்டே இழக்க நேரிட்டு 5 வருடமாக வாய்ப்பில்லாமல் தவித்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்தும் வருகிறார். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக 2014ல் சைமா விருதின் போது அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம், அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா அம்மா..
அதை வாங்கி பேசிய ஸ்ரீ திவ்யா, இயக்குனர் முதல் சக நடிகர்கள் வரை பெயர்களை கூறி நன்றி தெரிவித்தார். ஆனால் சிவகார்த்திகேயன் பெயரை மட்டும் மறந்துவிட்டார்.
சிவகார்த்திகேயனோ என் பெயரை கொஞ்சம் சொல்லு என்று பாவமாக பார்க்க உடனே அவருக்கு நன்றி என்று கூறினார்.
இது காமெடியாக இருந்தாலும் தனக்கு ஜோடியாக நடித்து வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனை எப்படி மறக்கலாம் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து விமர்சனம் செய்தனார். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.