3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம், அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா அம்மா..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் விசித்ரா மற்றும் ஜோவிகாவிற்கான பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருந்தது. 8 ஆம் வகுப்பு முடித்துவிட்டு படிப்பு வரவில்லை என்று அதை நிறுத்தி டிப்ளமோ முடித்ததாக கூறியிருந்தார்.
இதற்கு 12 ஆம் வகுப்பாவது முடித்திருக்கலாம் என்று அட்வைஸ் சொல்லியிருந்தார் விசித்ரா. இதற்கு ஜோவிகா விசித்ரா பேசியதை எதிர்ப்பு பேசி கத்தி சண்டை போட்டார்.
இதற்கு கமல் ஹாசன் இருதரப்பில் இருந்தும் பேசி நியாயத்தை கூறி சமாதானம் செய்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஜோவிகாவின் அம்மா நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், பிக்பாஸில் இருக்கும் பிள்ளைங்க எல்லாமே உங்க பிள்ளைங்க மாதிரி அக்கறை காட்டாதே என்றும் அவ டாட்டூ போடுறா, இவ தம் அடிக்குறா என்பதை அவங்க பெற்றோர் பாத்துப்பாங்க.
நீ 3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம், அதுக்குன்னு மத்த பிள்ளைங்கள ஓவரா கண்டீசன் போட கூடாது, எதுக்கு வீட்டுக்கு வந்தீங்களோ அத பாருங்க மூக்க நுழைக்காதீங்க மத்த விசயத்துல என்று கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.