39 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்-ஆ இது! லேட்டஸ்ட் போட்டோஷூட்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழில் வெளிவந்த காதல் கொண்டேன், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்த இவர், திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். மேலும் தற்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். இதுமட்டுமின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்வார்.
இந்த நிலையில், சிவப்பு நிற உடையில் அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ள ஸ்ரீதேவி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.




