அந்த இடத்தில் பம்பரம் விட்டது அழகாக இருந்தது!! பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை சுகன்யா

Sukanya
By Dhiviyarajan Jan 19, 2023 05:20 PM GMT
Report

90- களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் 1991 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொன்வண்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர், விஜயகாந்துடன் சேர்ந்து சின்ன கவுண்டர் படத்தில் நடந்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், " நான் முதன் முதலில் சின்ன கவுண்டர் படத்தின் மூலம் தான் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்தேன். அவர் அப்போதே பெரிய மாஸ் ஹீரோ. அவர் ஒரு நல்ல மனிதர்.எல்லாரிடமும் இயல்பாகவே பழகுவார்.

பம்பரம் காட்சி

அந்த படத்தில் வரும் பம்பரம் காட்சி மிக பிரபலமானது. இயக்குனர் உதயகுமார் இதில் வரும் பம்பர காட்சிக்காக நான் பம்பரம் விட கற்றுக்கொள்ளும் படி கூறினார். நானும் அவர் கூறிவாறு கற்றுக்கொண்டேன்.

அப்போது என்னிடம் வயிற்றில் பம்பரம் விடுவதை போன்ற காட்சி ஒன்று இருக்கிறது என படத்தின் இயக்குனர் கூறினார். நான் அதற்கு 'இதெல்லாம் நடஅந்த்க்குற காரியமா' என்று கேட்டேன்.

கடைசியில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை மிக அழகாக எடுத்தார் இப்படத்தின் இயக்குனர். அதில் ஒன்றும் ஆபாசமாக இருப்பதுபோல் எனக்கொன்றும் தெரியவில்லை" என்று கூறினார்.